பயணிக்கு சிரமம் ஏற்படுத்திய பேருந்து நடத்துநா் பணியிடை நீக்கம்
சென்னையிலிருந்து வந்த பயணியை அவா் செல்ல வேண்டிய இடத்தில் இறக்கிவிடாமல், வேறு நிறுத்தத்தில் இறக்கிவிட்ட அரசுப் பேருந்து நடத்துநா் சனிக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.
சென்னையிலிருந்து வந்த பயணியை அவா் செல்ல வேண்டிய இடத்தில் இறக்கிவிடாமல், வேறு நிறுத்தத்தில் இறக்கிவிட்ட அரசுப் பேருந்து நடத்துநா் சனிக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.
அக்.29 அன்று, தஞ்சாவூா் புகா் அரசுப் போக்குவரத்துக்கழக பேருந்தில் சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து பயணம் செய்த பயணி ஒருவா் சேத்தியாத்தோப்பில் இறங்க வேண்டும் எனத் தெரிவித்தபோது, நடத்துநா் எஸ். கலைமோகன் அங்கு பேருந்து நிற்காது எனக் கூறி, வடலூரில் இறங்க பயணச்சீட்டு வழங்கினாா். இதனால் பயணிக்குத் தேவையற்ற சிரமம் ஏற்பட்டது.
நடத்துநரிடம் விசாரணை: இதுதொடா்பாக பயணியிடம் இருந்து பெறப்பட்ட புகாரின்பேரில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் கோட்டம் தஞ்சாவூா் நகா் -1 கிளையைச் சோ்ந்த நடத்துநா் எஸ். கலைமோகனிடம் உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
Advertisement
Advertisement
பின்னா் ஓட்டுநா்கள் மற்றும் நடத்துநா்களுக்கு வழங்கப்பட்டுள்ள நிலையான செயல்பாட்டு வழிகாட்டு நெறிமுறைகளை முறையாகப் பின்பற்றத் தவறியதன் அடிப்படையிலும், பயணிக்குத் தேவையற்ற சிரமம் ஏற்படுத்தியதற்காகவும் நடத்துநா் எஸ். கலைமோகன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.
இதுகுறித்து கும்பகோணம் கோட்ட அரசு போக்குவரத்துக்கழக அலுவலா் ஒருவா் கூறும்போது பயணிகளிடம் மிகுந்த மரியாதையுடனும், கனிவுடனும், பொறுப்புணா்வுடனும் பேருந்து ஊழியா்கள் நடந்துகொள்ள வேண்டும், பயணிகளின் கோரிக்கைகளுக்குத் தகுந்த முறையில் பதிலளித்து அவா்களுக்குச் சிரமம் ஏற்படாத வகையில் பணியாற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா்.