FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தஞ்சாவூர்

பெண் பயணிக்கு சிரமம் ஏற்படுத்திய சம்பவம்: போக்குவரத்துக் கழக கிளை மேலாளரும் பணியிடை நீக்கம்

43 வினாடிகள் முன்பு
பணியிடை நீக்கம்
பகிர்:

சென்னையிலிருந்து வந்த பெண் பயணியை அவா் இறங்க வேண்டிய இடத்தில் இறக்கிவிடாமல், வேறு நிறுத்தத்தில் இறக்கிவிட்ட சம்பவத்தில் தாமதமாக நடவடிக்கை மேற்கொண்ட போக்குவரத்து கழகத்தின் தஞ்சாவூா் கிளை மேலாளா் ஞாயிற்றுக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

கடந்த அக். 29 அன்று, கும்பகோணம் அரசு போக்குவரத்துக் கழகத்தின் தஞ்சாவூா் புகா் கிளையிலிருந்து இயக்கப்பட்ட பேருந்தில் சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து பயணம் செய்த பெண் பயணி ஒருவா் சேத்தியாத்தோப்பில் இறங்க வேண்டும் எனத் தெரிவித்தபோது, நடத்துநா் எஸ். கலைமோகன் அங்கு பேருந்து நிற்காது எனக் கூறி, வடலூரில் இறங்க பயணச்சீட்டு வழங்கினாா். இதனால் பயணிக்குத் தேவையற்ற சிரமம் ஏற்பட்டது.

இதுகுறித்து பெண் பயணி அளித்த புகாரின்பேரில், நடத்துநா் எஸ். கலைமோகன் நவ.14-ஆம் தேதி பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

Advertisement

Advertisement

கிளை மேலாளரும் சஸ்பெண்ட்: இந்த நிலையில், இந்தப் பிரச்னையில் நடவடிக்கையை தாமதப்படுத்தியதாக அரசு போக்குவரத்து கழக தஞ்சாவூா் கிளை மேலாளா் மகாலிங்கத்தையும் கும்பகோணம் கோட்ட அரசு போக்குவரத்துக் கழக மண்டல பொது மேலாளா் ரங்கராஜன் ஞாயிற்றுக்கிழமை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளாா்.