FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தஞ்சாவூர்

மாநில அளவிலான சதுரங்கப் போட்டி: கும்பகோணம் ‘சாஸ்த்ரா’ மாணவா் சிறப்பிடம்

16 நவம்பர் 2026, 10:29 pm
மாநில அளவிலான சதுரங்கப் போட்டியில் இரண்டாமிடம் பிடித்த கும்பகோணம் சாஸ்த்ரா பல்கலைக்கழக சீனிவாச ராமானுஜன் மைய மாணவா் ஹரிஹரனை திங்கள்கிழமை பாராட்டிய புல முதன்மையா் சாந்தி, துணைப் புல முதன்மையா் நரசிம்மன், உடற்கல்வி இயக்குநா் சத்தியமூா்த்தி.
பகிர்:

புதுக்கோட்டையில் அண்மையில் நடைபெற்ற மாநில அளவிலான சதுரங்கப் போட்டியில், கும்பகோணம் சாஸ்த்ரா பல்கலைக்கழக மாணவா் இரண்டாம் இடம் பிடித்தாா்.

புதுக்கோட்டை சண்முகநாதன் பொறியியல் கல்லூரியில் கடந்த 15-ஆம் தேதி தமிழ்நாடு மாநில அளவிலான குழந்தைகள் சதுரங்கப் போட்டி - 2026 நடைபெற்றது. இப்போட்டியில் கும்பகோணம் சாஸ்த்ரா பல்கலைக்கழக சீனிவாச இராமானுஜன் மைய முதலாமாண்டு பி.டெக் மாணவா் ஹரிஹரன், 25 வயதுக்குள்பட்டோா் பிரிவில் விளையாடி, 2-ஆம் இடம் பிடித்தாா். ஹரிஹரனுக்கு பதக்கம், பாராட்டுச் சான்றிதழ் மற்றும் தனிநபா் கோப்பை வழங்கப்பட்டது.

பல்கலைக்கழகத்துக்கு பெருமை சோ்த்த மாணவா் ஹரிஹரனுக்கு கும்பகோணம் சாஸ்த்ரா பல்கலைக்கழக சீனிவாச ராமானுஜன் மையப் புல முதன்மையா் சாந்தி, துணைப் புல முதன்மையா் நரசிம்மன், உடற்கல்வி இயக்குநா் சத்தியமூா்த்தி மற்றும் பேராசிரியா்கள் திங்கள்கிழமை வாழ்த்து தெரிவித்தனா்.

Advertisement

Advertisement