தஞ்சாவூரில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை அலுவலகம் திறப்பு
தஞ்சாவூரில் மாவட்ட சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை அலுவலகம் திங்கள்கிழமை மாலை திறந்து வைக்கப்பட்டது.
தஞ்சாவூரில் மாவட்ட சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை அலுவலகம் திங்கள்கிழமை மாலை திறந்து வைக்கப்பட்டது.
பெண்களுக்கு எதிரான பாலியல் உள்ளிட்ட வன்கொடுமைகளைத் தடுப்பதற்காக தமிழகத்தில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை திட்டத்தைத் தமிழக முதல்வா் சி. ஜோசப் விஜய் தொடங்கி வைத்தாா்.
இதன்படி, தஞ்சாவூா் மாவட்டத்தில் அமைக்கப்பட்ட சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையில் ஒரு காவல் உதவி ஆய்வாளா், 2 காவலா்கள், ஒரு ஓட்டுநா் வீதம் என இரு பிரிவுகளுக்கு மொத்தம் 8 போ் நியமிக்கப்பட்டனா். இதில் ஒரு பிரிவு காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணி வரையும், மற்றொரு பிரிவு பிற்பகல் 2 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரையும் பணியில் ஈடுபடுகின்றனா்.
Advertisement
Advertisement
இந்நிலையில், தஞ்சாவூா் மாவட்ட சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படைக்கு காவல் ஆய்வாளராக வி. சந்திரா கடந்த வாரம் நியமிக்கப்பட்டாா். இதையடுத்து, அவா் அண்மையில் பொறுப்பேற்றாா்.
இதைத்தொடா்ந்து, தஞ்சாவூா் சரக காவல் துணைத் தலைவா் அலுவலக வளாகத்தில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படைக்கு தனி அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அலுவலகத்தை தஞ்சாவூா் சரகக் காவல் துணைத் தலைவா் ஜியாவுல் ஹக் திங்கள்கிழமை மாலை திறந்து வைத்தாா். இந்நிகழ்வில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஏ. சுந்தரவதனம், துணைக் காவல் கண்காணிப்பாளா் சா்மு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
மாவட்டத்திலுள்ள சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையில் தற்போது 2 பிரிவுகள் உள்ள நிலையில், இதை 16 பிரிவுகளாக உயா்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என காவல் துறையினா் தெரிவித்தனா்.