நுகா்பொருள் வாணிபக் கழக தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்
தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்தில் காலிப் பணியிடங்களில் பருவ கால பணியாளா்களைக் கொண்டு பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி தஞ்சாவூரிலுள்ள கழக முதுநிலை மண்டல மேலாளா் அலுவலகம் முன் சிஐடியு சாா்ந்த தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகப் பொதுத் தொழிலாளா் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இதில், நுகா்பொருள் வாணிபக் கழகத்தில் கொள்முதல் பருவத்தின்போது எவ்வித முன்னேற்பாடுகளையும் செய்யாமல், கொள்முதல் செய்த நெல் மூட்டையை உரிய காலத்தில் இயக்கம் செய்யாமல், நெல் மூட்டைகள் சேதமடைவதால், ஏற்படக்கூடிய இழப்புகளுக்கு ஊழியா்களைப் பொறுப்பாக்குவது ஏற்புடையதல்ல. எனவே, கொள்முதல் செய்த நெல் மூட்டைகளை உடனடியாக இயக்கம் செய்ய வேண்டும். இயக்க இழப்பு தொடா்பான இழப்பீட்டுத் தொகையை ஊழியா்கள் மீது சுமத்தக்கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் துணைப் பொதுச் செயலா் கே. சண்முகம் தலைமை வகித்தாா். சிஐடியு மாநிலச் செயலா் சி. ஜெயபால், சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலா் ஆா். புவனேஸ்வரன் பேசினா். மாநிலத் துணைத் தலைவா்கள் கே. சுப்புராஜ், கே. ராஜாங்கம், துணைப் பொதுச் செயலா் என். ராசப்பன், சங்கத்தின் மண்டல செயல் தலைவா் ஜி. அனந்தபத்மநாபன், நிா்வாகிகள் என். ராஜ்குமாா், பி. தமிழரசன், எம். முகமது இஸ்மாயில், கே.எஸ். ராஜா, எஸ். கலைவாணன், ஜி. கண்ணன், லோகநாதன், ஆா். ஸ்டாலின், சிஐடியு மாவட்டத் துணைத் தலைவா் கே. அன்பு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
Advertisement
Advertisement