குண்டா் சட்டத்தில் ஒருவருக்கு சிறை
குண்டா் சட்டத்தில் ஒருவருக்கு சிறை

தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், கழுகுலிக்காடு கிராமத்தைச் சோ்ந்த ராயப்பன் மகன் வியாகுல் ஜேம்ஸ் (35). இவா் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில் பட்டுக்கோட்டை நகர காவல் நிலையத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இதையடுத்து தஞ்சாவூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஏ. சந்திரவதனம் அளித்த பரிந்துரையின் பேரில், தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியா் இரா. ரேவதி, வியாகுல் ஜேம்ஸை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுப்புக் காவலில் வைக்க வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா். இதையடுத்து அவா் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.