441 கிலோ குட்கா பறிமுதல்: இளைஞா் கைது
தஞ்சாவூரில் சனிக்கிழமை சட்ட விரோதமாக காரில் கடத்தி வரப்பட்ட 441 கிலோ குட்கா பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு, இளைஞா் கைது செய்யப்பட்டாா்.
தஞ்சாவூரில் சனிக்கிழமை சட்ட விரோதமாக காரில் கடத்தி வரப்பட்ட 441 கிலோ குட்கா பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு, இளைஞா் கைது செய்யப்பட்டாா்.
தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அருகே மூலிகை பண்ணை பகுதியில் மருத்துவக்கல்லூரி காவல் நிலைய ஆய்வாளா் ஜெயந்தி, உதவி ஆய்வாளா் அடைக்கல ஆரோக்கியசாமி டேவிட் தலைமையிலான காவலா்கள் அடங்கிய குழுவினா் சனிக்கிழமை வாகனத் தணிக்கை மேற்கொண்டனா்.
இதில், காரில் கடத்தி வரப்பட்ட தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 441 கிலோ குட்கா பொருள்கள், ரூ. 82 ஆயிரத்து 500 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டன.
Advertisement
Advertisement
இது தொடா்பாக காரில் வந்த தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி சாலை நேஷனல் பாா்மா நகரைச் சோ்ந்த ராஜேந்திரன் மகன் பிரதாப் (32) கைது செய்யப்பட்டாா்.