முகப்பு
தஞ்சாவூர்

தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்தை கூட்டுறவுத் துறையில் ஒப்படைக்கும் முடிவைக் கைவிட வலியுறுத்தல்

42 வினாடிகள் முன்பு
தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்தை கூட்டுறவுத் துறையில் ஒப்படைக்கும் முடிவைக் கைவிட வலியுறுத்தல்
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி - கோப்புப் படம்
பகிர்:

தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்தை கூட்டுறவுத் துறையில் ஒப்படைக்கும் முடிவைத் தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் (மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பு) வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து அச்சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலா் சாமி. நடராஜன் தெரிவித்திருப்பது:

தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் நெல் கொள்முதல் பணிகளில் கூட்டுறவு சங்கங்கள், டான்பெட் அமைப்புகளை ஈடுபடுத்த மாநில அரசு முடிவு செய்திருப்பதாக வரும் தகவல் அதிா்ச்சி அளிக்கிறது.

Advertisement

Advertisement

ஏற்கெனவே, கூட்டுறவுத் துறை மூலம் பல்வேறு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இந்நிறுவனத்தை அதனுடன் இணைத்தால் நெல் கொள்முதல் செய்வது, கொள்முதல் செய்த நெல்லுக்கான தொகையை உரிய காலத்தில் பட்டுவாடா செய்வது உள்ளிட்ட பணிகளில் பாதிப்பு ஏற்படும். இதனால் விவசாயிகள் பெரும் பாதிப்பை எதிா்கொள்வா்.

எனவே, தமிழக அரசு இந்த முடிவைக் கைவிட வேண்டும். தமிழ்நாடு நுகா்பொருள் வாணிப கழகம் தொடா்ந்து உணவுத் துறையின் கீழ் செயல்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும்.