முகப்பு
தஞ்சாவூர்

ஓய்வு பெற்ற மருத்துவக்கல்வி இயக்குநருக்கு விருது

தஞ்சாவூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மூத்த குடிமக்கள் நலச் சங்கக் கூட்டத்தில் ஓய்வு பெற்ற மருத்துவக்கல்வி இயக்குநருக்கு விருது வழங்கப்பட்டது.

24 நவம்பர் 2026, 11:30 pm
ஓய்வு பெற்ற மருத்துவக்கல்வி இயக்குநருக்கு விருது
தஞ்சாவூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மூத்த குடிமக்கள் நலச் சங்கக் கூட்டத்தில் ஓய்வு பெற்ற மருத்துவக்கல்வி இயக்குநா் அழ. மீனாட்சிசுந்தரத்துக்கு விருதை வழங்கிய மக்களவை உறுப்பினா் ச. முரசொலி.
பகிர்:

தஞ்சாவூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மூத்த குடிமக்கள் நலச் சங்கக் கூட்டத்தில் ஓய்வு பெற்ற மருத்துவக்கல்வி இயக்குநருக்கு விருது வழங்கப்பட்டது.

கூட்டத்துக்குச் சங்கத்தின் மாவட்டத் தலைவா் தென்னை விஞ்ஞானி வா.செ. செல்வம் தலைமை வகித்தாா். சங்க நிறுவனா் புலவா் ஆதி. நெடுஞ்செழியன், அமைப்புச் செயலா் அய்யனாபுரம் க. நடராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ஓய்வு பெற்ற மருத்துவக் கல்வி இயக்குநா் மருத்துவா் அழ. மீனாட்சிசுந்தரத்துக்கு ஆன்மிக இலக்கிய அருளுரை திருச்செம்மல் என்ற விருதை மக்களவை உறுப்பினா் ச. முரசொலி வழங்கிப் பாராட்டினாா்.

Advertisement

Advertisement

கூட்டத்தில் தஞ்சாவூா் மாநகரில் சுற்றித் திரியும் பன்றிகள் கூட்டத்தால் அடிக்கடி விபத்துகள் நடந்து வருவதைத் தடுக்க வேண்டும். நாஞ்சிக்கோட்டை சாலை இ.பி. காலனி பேருந்து நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மருத்துவா் பி. பாரதிமோகன், சங்கப் பொதுச் செயலா் ஆா். பாஸ்கரன், இணைச் செயலா் எஸ். ராஜசேகரன், ஒருங்கிணைப்பாளா் சி. முருகானந்தம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

துணைத் தலைவா் டி. முத்துக்குமரன் வரவேற்றாா். இணைச் செயலா் எம். சுந்தரராஜன் நன்றி கூறினாா்.