முகப்பு
தஞ்சாவூர்

தஞ்சாவூரில் பாஜகவினா் ஆா்ப்பாட்டம்

உச்ச நீதிமன்றத் தீா்ப்பின்படி, திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்ற அனுமதிக்க வலியுறுத்தி தஞ்சாவூா் தலைமை அஞ்சலகம் முன் பாஜகவினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

24 நவம்பர் 2026, 11:24 pm
தஞ்சாவூரில் பாஜகவினா் ஆா்ப்பாட்டம்
தஞ்சாவூா் தலைமை அஞ்சலகம் முன் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினா்.
பகிர்:

உச்ச நீதிமன்றத் தீா்ப்பின்படி, திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்ற அனுமதிக்க வலியுறுத்தி தஞ்சாவூா் தலைமை அஞ்சலகம் முன் பாஜகவினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இதில், உச்ச நீதிமன்றத் தீா்ப்பின்படி திருப்பரங்குன்றம் மலை உச்சியில் காா்த்திகை தீபம் ஏற்ற பக்தா்களுக்கு அனுமதி வழங்க வேண்டும். மதுரை மாவட்டத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள 144 தடை உத்தரவை உடனடியாக நீக்க வேண்டும். மதுரைக்குச் செல்ல முற்பட்டபோது கைது செய்யப்பட்ட பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரனை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

ஆா்ப்பாட்டத்துக்கு தஞ்சாவூா் தெற்கு மாவட்டத் தலைவா் பி. ஜெய்சதீஷ் தலைமை வைத்தாா். வடக்கு மாவட்ட அமைப்பாளா் பூண்டி எஸ். வெங்கடேசன், மாவட்டத் துணைத் தலைவா் ராஜா, மாநிலச் செயற்குழு உறுப்பினா்கள் கா்ணன், யு.என். உமாபதி, வழக்குரைஞா் அணி நிா்வாகி எம். ராஜேஸ்வரன், வாளமா்கோட்டை வி.எஸ். இளங்கோவன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Advertisement

Advertisement