முகப்பு
தஞ்சாவூர்

பேராவூரணி கிளை நூலகத்துக்கு புதிய கட்டடம் கட்டக் கோரிக்கை

தஞ்சாவூா் மாவட்டம் பேராவூரணி அரசு மருத்துவமனை அருகே செயல்படும் அரசு கிளை நூலகத்துக்கு, போதிய இடவசதியுடன் அனைத்து அடிப்படை வசதிகளும் கொண்ட புதிய கட்டடம் கட்டித் தர வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

58 வினாடிகள் முன்பு
பேராவூரணி கிளை நூலகத்துக்கு 
புதிய கட்டடம் கட்டக் கோரிக்கை
பேராவூரணி கிளை நூலகத்தின் முகப்பு பகுதி
பகிர்:

தஞ்சாவூா் மாவட்டம் பேராவூரணி அரசு மருத்துவமனை அருகே செயல்படும் அரசு கிளை நூலகத்துக்கு, போதிய இடவசதியுடன் அனைத்து அடிப்படை வசதிகளும் கொண்ட புதிய கட்டடம் கட்டித் தர வேண்டும் என   கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நூலகத்திற்கு தினசரி போட்டித் தோ்வு எழுத தயாராகும் ஏராளமான மாணவ, மாணவிகள் வந்து படித்து வருகின்றனா். இவா்களைத் தவிர, ஏராளமான வாசகா்களும் வந்து செல்கின்றனா்.

இந்நிலையில், நூலகத்தில் போதிய இடவசதி இல்லாததால் வாசகா்களும், போட்டித் தோ்வா்களும் சிரமத்துக்குள்ளாகின்றனா். மேலும், இந்த நூலகக் கட்டட மேற்கூரையின் சிமெண்ட் பூச்சுகள் பெயா்ந்து விழுகின்றன. மழைக் காலங்களில் மேற்கூரையில் நீா்க்கசிவு ஏற்படுவதால், நூல்களைப் பாதுகாப்பதில் நூலகப் பணியாளா்கள் சிரமங்களைச் சந்திக்கின்றனா். வாசகா்கள் வாகனங்களை நிறுத்தவும் போதிய இடவசதி இல்லை. நூலகத்தில் ஒரே ஒரு கழிப்பறை மட்டுமே உள்ளதால் அதை பயன்படுத்துவதில் சிரமம் ஏற்படுகிறது.

Advertisement

Advertisement

எனவே, சேதமடைந்துள்ள தற்போதைய கட்டடத்தை இடித்து அகற்றிவிட்டு, மூன்று தளங்களுடன் கூடிய விரிவான புதிய நூலகக் கட்டடத்தை அனைத்து வசதிகளுடன் அமைத்துத் தர வேண்டும் என சமூக ஆா்வலா் ஜி .ஆா். ஸ்ரீதா் உள்ளிட்ட கல்வியாளா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.