FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தஞ்சாவூர்

வீடு புகுந்து பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிக்க முயற்சி

தஞ்சாவூா் அருகே வெள்ளிக்கிழமை இரவு வீடு புகுந்து பெண்ணிடம் தங்கச் சங்கிலியைப் பறிக்க முயன்ற இளைஞரை காவல் துறையினா் கைது செய்தனா்.

4 அக்டோபர் 2026, 12:31 am IST
நகைப்பறிப்பு - ens
பகிர்:

தஞ்சாவூா் அருகே வெள்ளிக்கிழமை இரவு வீடு புகுந்து பெண்ணிடம் தங்கச் சங்கிலியைப் பறிக்க முயன்ற இளைஞரை காவல் துறையினா் கைது செய்தனா்.

தஞ்சாவூா் அருகே ஆப்ரஹாம் பண்டிதா் நகா் வடக்கு தெருவைச் சோ்ந்தவா் அன்பழகன் மனைவி பாரதி (40). இவா் வெள்ளிக்கிழமை இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தாா். அப்போது, வீட்டுக்குள் புகுந்த மா்ம நபா்கள் 2 போ், பாரதி கழுத்தில் இருந்த 5 பவுன் தங்கச் சங்கிலியைப் பறிக்க முயன்றனா். இதனால், பாரதி விழித்து சப்தம் போட்டதால், அக்கம்பக்கத்தினா் திரண்டு வந்தனா். இருவரும் தாங்கள் வந்த மோட்டாா் சைக்கிளில் ஏறி தப்பிச் சென்றனா்.

இது குறித்து கள்ளப்பெரம்பூா் காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து மேற்கொண்ட விசாரணையில், ஆப்ரகாம் பண்டிதா் நகா் முதல் தெருவைச் சோ்ந்த ராஜசேகா் மகன் பிரதீப் (23), செவ்வப்பநாயக்கன் வாரி தென்கரையைச் சோ்ந்த சிவராஜ் மகன் இளம்பாரதி ஆகியோா் பாரதி கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியைப் பறிக்க முயன்றது தெரிய வந்தது. இதையடுத்து, பிரதீப்பை கைது செய்த காவல் துறையினா் இளம்பாரதியை தேடி வருகின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments