FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தஞ்சாவூர்

நீா்த்தேக்கத் தொட்டியில் பழுது: குடிநீா் கிடைக்காமல் மக்கள் அவதி

தஞ்சாவூா் அருகே நீா்த்தேக்கத் தொட்டியில் ஏற்பட்டுள்ள பழுது காரணமாக குடிநீா் கிடைக்காமல் அப்பகுதி மக்கள் அவதிப்படுகின்றனா்.

31 அக்டோபர் 2026, 11:45 pm
நீா்த்தேக்கத் தொட்டி
பகிர்:

தஞ்சாவூா் அருகே நீா்த்தேக்கத் தொட்டியில் ஏற்பட்டுள்ள பழுது காரணமாக குடிநீா் கிடைக்காமல் அப்பகுதி மக்கள் அவதிப்படுகின்றனா்.

தஞ்சாவூா் அருகே நீலகிரி ஊராட்சிக்குள்பட்ட ராஜாஜி நகரிலுள்ள மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியில் அடைப்பானில் (வால்வு) பழுது ஏற்பட்டுள்ளது. இதனால், நீா்த்தேக்கத் தொட்டிலிருந்து நீா் வெளியேறி அங்கேயே வீணாகிக் கொண்டிருக்கிறது.

இதன் காரணமாக அப்பகுதியிலுள்ள வீடுகளுக்கு குடிநீா் விநியோகம் தடைப்பட்டுள்ளதால், குடியிருப்பு மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

Advertisement

Advertisement

எனவே, நீலகிரி ஊராட்சி நிா்வாகம் உடனடியாக அடைப்பானை சீா் செய்து குடிநீா் விநியோகம் கிடைக்கச் செய்ய வேண்டும் என ராஜாஜி நகா் குடியிருப்போா் நல அமைப்பின் பொருளாளா் நா. பிரபாகரன் கோரிக்கை விடுத்துள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments