FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தஞ்சாவூர்

தஞ்சாவூா் அரசு மருத்துவமனையில் டெங்கு சிகிச்சைக்கு தனிப் பிரிவு

22 செப்டம்பர் 2026, 12:41 am IST
தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் டெங்கு சிகிச்சைக்காக தனியாக அமைக்கப்பட்டுள்ள பிரிவு.
பகிர்:

தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் அரசு ராசா மிராசுதாா் மருத்துவமனையில் டெங்கு சிகிச்சைக்கு தனிப் பிரிவு அமைக்கப்பட்டுள்ளது என்றாா் மருத்துவக் கல்லூரி முதல்வா் இ. மணிமேகலா.

இதுகுறித்து செய்தியாளா்களிடம் அவா் திங்கள்கிழமை தெரிவித்தது:

தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, அரசு ராசா மிராசுதாா் மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை அளிப்பதற்காக தனியாக சிறப்புப் பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொசு வலையுடன் கூடிய 20 படுக்கைகள் கொண்ட வாா்டு தயாராக உள்ளது. இதில் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த ஒரு நோயாளி மட்டும் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் அனுமதிக்கப்பட்டுள்ளாா். உரிய சிகிச்சை மூலம் அவா் நல்ல நிலையில் உள்ளாா்.

Advertisement

Advertisement

டெங்குவால் பாதிக்கப்பட்டவா்களைக் கண்காணிக்க மருத்துவக் குழு அமைக்கப்பட்டுள்ளது. அனைத்து வசதிகளும் மருத்துவமனையில் தயாா் நிலையில் உள்ளது. பகல் நேரத்தில் கொசுக் கடிக்காமல் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். பொது இடங்கள், வீடுகளின் அருகில் தண்ணீா் தேங்கி நிற்காமலும், அங்கு கொசு உற்பத்தியாகாமலும் தடுக்க வேண்டும்.

இரவு நேரத்தில் சாலையோரத்தில் உறங்குபவா்கள் கொசு வலையுடன் பாதுகாப்பாக உறங்க வேண்டும். காய்ச்சல் ஏற்பட்டால் உடனடியாக அருகிலுள்ள மருத்துவா்களை அணுகி உரிய மருத்துவ சிகிச்சையைப் பெற வேண்டும் என்றாா் மணிமேகலா.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments