அண்ணா பிறந்த நாள் சைக்கிள் போட்டி
தமிழக முன்னாள் முதல்வர் அண்ணாவின் 106-வது பிறந்த நாளையொட்டி, திருச்சி அண்ணா விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை சைக்கிள் போட்டி நடத்தப்பட்டது. 3 பிரிவுகளில் மொத்தம் 280 பேர் பங்கேற்றனர்.
தமிழக முன்னாள் முதல்வர் அண்ணாவின் 106-வது பிறந்த நாளையொட்டி, திருச்சி அண்ணா விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை சைக்கிள் போட்டி நடத்தப்பட்டது. 3 பிரிவுகளில் மொத்தம் 280 பேர் பங்கேற்றனர்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் அண்ணாவின் பிறந்த நாளையொட்டி 13,15,17 வயதுக்குள்பட்டோர் பிரிவுகளில் மாணவ, மாணவிகளுக்குத் தனித்தனியே போட்டிகள் நடத்தப்பட்டன. 13 வயதுக்குள்பட்ட மாணவர்களுக்கு 15 கி.மீ. தொலைவும், மாணவிகளுக்கு 10 கி.மீ. தொலைவும், 15, 17 வயதுக்குள்பட்ட மாணவர்களுக்கு 20 கி.மீ. தொலைவும், மாணவிகளுக்கு 15 கி.மீ. தொலைவும் போட்டி எல்லையாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
மூன்றுப் பிரிவுகளில் 230 மாணவர்களும், 50 மாணவிகளும் என 280 பேர் போட்டியில் பங்கேற்றனர். ஒவ்வொரு பிரிவிலும் முதல் 3 இடங்களைப் பிடித்தவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
Advertisement
Advertisement
வெற்றிப் பெற்ற மாணவிகளுக்குப் பரிசுகளை ஆட்சியர் கே.எஸ். பழனிசாமி வழங்கிப் பேசினார். மேலும், 10 இடங்களைப் பெற்றவர்களுக்குத் தகுதிச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் பி. கலைச்செல்வன் போட்டிக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.