நீதிமன்ற உத்தரவின் பேரில் சார்பதிவாளர் மீது போலீஸார் வழக்குப் பதிவு
விவசாயிகள் சங்க நிர்வாகி உள்ளிட்டோரை தாக்கியது தொடர்பாக நீதிமன்ற உத்தரவின் பேரில், மணப்பாறை சார் பதிவாளர் மீது, போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
விவசாயிகள் சங்க நிர்வாகி உள்ளிட்டோரை தாக்கியது தொடர்பாக நீதிமன்ற உத்தரவின் பேரில், மணப்பாறை சார் பதிவாளர் மீது, போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
மணப்பாறை அருகேயுள்ள புத்தாநத்தம் கீழத்தெருவைச் சேர்ந்தவர் மு. அப்துல்லா. மணப்பாறை தாலுகா மாணாவாரி மற்றும் இறவை பாசனதாரர் விவசாயிகள் சங்க செயலாளராக உள்ளார். இவர் மணப்பாறை சார்பதிவாளராக பணியாற்றி வரும் ராஜேந்திரன் மீது, அவர் லஞ்சம் வாங்குவதாகவும், அது குறித்து தட்டிக்கேட்டபோது தரக்குறைவாக பேசியதாகவும் புத்தாநத்தம் போலீஸில் புகார் செய்தார். ஆனால் போலீஸார் புகாரைப் பெறவில்லை.
இதற்கிடையே கடந்த மே மாதம் மணப்பாறை பேருந்து நிலையத்தில் நின்றிருந்த போது, அப்துல்லா உள்ளிட்ட 4 பேர் மீது, பதிவாளர் ராஜேந்திரனின் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகின்றது. இது குறித்தும் புகார் செய்ததின் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்யவில்லை. எனவே இது குறித்து அப்துல்லா மதுரை உயர் நீதிமன்றக்கிளையில் புகார் செய்தார்.
Advertisement
Advertisement
அதன்பேரில் வழக்கு பதிவு செய்து சம்பவம் குறித்து விசாரணை நடத்த உயர்நீதிமன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து புத்தாநத்தம் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.