மாற்றுத்திறனாளிகள் திருமண நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம்
திருச்சி மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு 4 வகையான திருமண நிதியுதவி வழங்கப்படுவதாகவும், தகுதியானோர் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் கு.ராசாமணி தெரிவித்துள்ளார்.
திருச்சி மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு 4 வகையான திருமண நிதியுதவி வழங்கப்படுவதாகவும், தகுதியானோர் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் கு.ராசாமணி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
திருச்சி மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு 2018-19ஆம் நிதியாண்டுக்கு 4 வகையான திருமண நிதியுதவித்தொகை வழங்கப்படுகிறது.
கை, கால் பாதிக்கப்பட்டோரை நல்ல நிலையில் உள்ளவர் திருமணம் செய்வோருக்கான உதவித் திட்டம், பார்வையற்ற நபரை நல்ல நிலையில் உள்ளவர் திருமணம் செய்வோருக்கான உதவி திட்டம், காது, கேளாதா மற்றும் வாய்பேச இயலாத நபரை நல்ல நிலையில் உள்ளவர் திருமணம் செய்வோருக்கான உதவி திட்டம், மாற்றுத் திறனாளியை மாற்றுத்திறனாளியே திருமணம் செய்வோருக்கான உதவி திட்டம் என 4 நிலைகளில் உதவித் தொகை வழங்கப்படுகிறது.
இத்திட்டங்களின் கீழ், திருச்சி மாவட்டத்தில் திருமணம் செய்தோருக்கு ரூ.25 ஆயிரம் ரொக்கம், 8 கிராம் தங்கம் வழங்கப்படும். பட்டம் அல்லது பட்டயப்படிப்பு முடித்திருந்தால் ரூ.50 ஆயிரம், 8 கிராம் தங்கம் வழங்கப்படும். தம்பதியர்களில் இருவருக்கும் முதல் திருமணமாக இருத்தல் வேண்டும். திருமணம் முடிந்த ஓராண்டுக்குள் விண்ணப்பிக்க வேண்டும். திருமண அழைப்பிதழ், பாஸ்போர்ட் அளவு புகைப்படம், குடும்ப அட்டை நகலுடன் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும், விவரங்கலுக்கு திருச்சி மாவட்ட நீதிமன்ற வளாகம் பின்புறம் அமைந்துள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தை நேரிலோ அல்லது 0431-2412590 என்ற தொலைபேசி எண்களிலோ தொடர்பு கொள்ளாம் என்றார் ஆட்சியர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.