தரமான ரேசன் பொருள்கள் வழங்க வலியுறுத்தி மறியல்
திருச்சி மாவட்டம், தொட்டியம் வட்டத்திற்குட்பட்ட அலகரை மேற்கு பகுதியில் உள்ள நியாய விலைக்கடையில்
திருச்சி மாவட்டம், தொட்டியம் வட்டத்திற்குட்பட்ட அலகரை மேற்கு பகுதியில் உள்ள நியாய விலைக்கடையில் கடந்த சில மாதங்களாக மண்ணெண்ணய் , பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் போதிய அளவில் கிடைக்கவில்லை எனவும், தரமான அரிசி வழங்கவில்லை எனவும் இந்தக் குறைகளை சீரமைக்க வலியுறுத்தி முசிறி - பவித்திரம் சாலையில் பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த தொட்டியம் போலீஸார் மற்றும் வட்ட வழங்கல் அலுவலர் சுந்தரி சம்பவ இடத்துக்குச் சென்று போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து, பொதுமக்கள் தங்களது போராட்டத்தை விலக்கிக் கொண்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.