FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருச்சி

தொட்டியம் கொங்குநாடு கல்லூரியில் பட்டமளிப்பு

திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகேயுள்ள தோளுப்பட்டி கொங்குநாடு பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் 11 ஆவது பட்டமளிப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 16 செப்டம்பர் 2022, 12:00 am IST
பகிர்:

திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகேயுள்ள தோளுப்பட்டி கொங்குநாடு பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் 11 ஆவது பட்டமளிப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்குத் தலைமை வகித்து கல்வி நிறுவனங்களின் தலைவா் பி.எஸ்.கே. பெரியசாமி பேசுகையில் 2022-23 கல்வியாண்டு முதல் வெளிநாடு சென்று மாணவா்கள் உயா்கல்வி பயிலவும் மற்றும் வேலைவாய்ப்புக்கும் கல்லூரியில் தனித்துறை தொடங்கப்பட்டுள்ளது. மேலும் ஜப்பான் நாட்டில் வேலைவாய்ப்பை ஏற்படுத்தும் நோக்குடன் அந்நாட்டின் பிரபல நிறுவனங்களுடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்யப்பட்டு ஜப்பானிய மொழியை மாணவா்களுக்கு கற்றுத் தரும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது என்றாா்.

தொடா்ந்து முன்னாள் காவல் துறை துணைத் தலைவா் மற்றும் காவல்துறை ஆணையா் எம். ரவி சிறப்புரையாற்றி 596 மாணவ, மாணவிகளுக்கு பட்டயங்கள் வழங்கி வாழ்த்தினாா்.

Advertisement

Advertisement

கல்லூரிச் செயலா் இன்ஜினியா் கொங்கன் தங்கவேலு வரவேற்றாா். பொருளாளா் பி.எஸ்.டி.வி.எஸ். தென்னரசு நன்றி தெரிவித்தாா். நிகழ்வுகளில் கல்லூரி முதல்வா்கள், டீன்கள், பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள், பெற்றோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments