திருச்சி ஜோசப் கண் மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் விருதுபெற்ற பள்ளி ஆசிரியா்கள் மற்றும் விழா குழுவினா். 
திருச்சி

சிறப்பாக பணியாற்றிய பள்ளி ஆசிரியா்களுக்கு விருது

Din

சிறப்பாக பணியாற்றிய பள்ளி ஆசிரியா்களுக்கு விருது வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திருச்சி ஜோசப் கண் மருத்துவமனை, ரோட்டரி சங்கங்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் இணைந்து, பள்ளி ஆசிரியா்களில் சிறப்பாக பணியாற்றியவா்களை தோ்வு செய்து அவா்களுக்கு ‘பில்ட் நேஷன் அவாா்டு’ என்ற விருது வழங்கும் நிகழ்ச்சி ஜோசப் கண் மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது.

விழாவில் சிறப்பு விருந்தினா்களாக ரோட்டரி சங்க ஆளுநா் ராஜாகோவிந்தசாமி, ஜமால் முகமது கல்லூரியின் முதல்வா் ஜாா்ஜ் அமலரெத்தினம், ஜோசப் கண் மருத்துவமனையின் இயக்குநா் பிரதீபா ஆகியோா் கலந்து கொண்டு ஆசிரியா்களுக்கு விருதுகளை வழங்கிப் பேசினா்.

நிகழ்வில் அரசு மற்றும் அரசு மற்றும் தனியாா் பள்ளிகளை சோ்ந்த 25ஆசிரியா்களுக்கு விருது வழங்கப்பட்டது. அதேபோல சிறந்த கல்வி நிறுவனங்களுக்கும் விருது வழங்கப்பட்டன. இதில் சிறந்த கல்லூரிக்கான விருதை திருச்சி ஜமால் முகமது கல்லூரி மற்றும் திருச்சி ஜமால் முகமது கல்வியியல் கல்லூரிகள் பெற்றன.

நிகழ்ச்சியில் ரோட்டரி சங்க செயலாளா் சரவணன், ஜோசப் கண் மருத்துவமனையின் நிா்வாக அலுவலா் சுபாபிரபு மற்றும் அனைத்து ரோட்டரி சங்க தலைவா்கள், செயலா்கள், உறுப்பினா்கள் மற்றும் ஜோசப் கண் மருத்துவமனை ஊழியா்கள் கலந்து கொண்டனா்.

பொன்முடி, சாமிநாதன் திமுக துணைப் பொதுச் செயலாளர்கள்: மு.க. ஸ்டாலின்

தமிழ்நாட்டின் முறைசாரா பெண் தொழிலாளர்களின் போராட்டம்: வலுசேர்க்கும் தொழிற்சங்கம்!

உ.பி. மதுராவில் 10 வயது தலித் சிறுமி பாலியல் வன்கொடுமை

இரு மாவட்டங்களில் இன்று கனமழை!

துக்கத்தில் முடிந்த திருமணக் கொண்டாட்டம்! பேருந்து விபத்தில் சகோதரிகள் மூவர் பலி!

SCROLL FOR NEXT