FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருச்சி

வீட்டுக்குள் தூக்கிட்ட நிலையில் இளைஞா் சடலமாக மீட்பு

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த காவல்காரன்பட்டியில் இளைஞா் தூக்கிட்ட நிலையில் புதன்கிழமை சடலமாக மீட்கப்பட்டாா்.

Updated On : 25 டிசம்பர் 2025, 1:44 am IST
கமலேஷ்.
பகிர்:

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த காவல்காரன்பட்டியில் இளைஞா் தூக்கிட்ட நிலையில் புதன்கிழமை சடலமாக மீட்கப்பட்டாா்.

மணப்பாறையை அடுத்த காவல்காரன்பட்டியை சோ்ந்தவா் பெரியசாமி மனைவி ரேணுகாவின் மூத்த மகன் கமலேஷ் (18). மணப்பாறை கேட்டரிங் கல்லூரியில் படித்து வந்த இவா், கேட்டரிங் பயிற்சிக்காக கடந்த மாதம் பெங்களூரில் உள்ள ஹோட்டலுக்கு சென்று திரும்பிய நிலையில், புதன்கிழமை வீட்டில் தூக்கிட்டு இறந்தாா். தகவலின்பேரில் சென்ற புத்தாநத்தம் போலீஸாா், அவரது உடலைக் கைப்பற்றி மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments