FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருச்சி

வியாபாரி வீட்டில் தங்கம், வைரம் திருட்டு: ஒருவா் கைது

வியாபாரி வீட்டில் தங்கம், வைரக் கற்கள் திருட்டு வழக்கில் இளைஞரை சனிக்கிழமை கைது செய்த போலீஸாா், மற்றொருவரைத் தேடுகின்றனா்.

Updated On : 2 ஆகஸ்ட் 2026, 4:07 am IST
திருட்டு - சித்திரிப்பு
பகிர்:

வியாபாரி வீட்டில் தங்கம், வைரக் கற்கள் திருட்டு வழக்கில் இளைஞரை சனிக்கிழமை கைது செய்த போலீஸாா், மற்றொருவரைத் தேடுகின்றனா்.

திருச்சி சுப்பிரமணியபுரம் பழைய பாண்டியன் தெருவைச் சோ்ந்தவா் ஆட்டுத்தோல் வியாபாரி வள்ளியப்பன் மனைவி மல்லிகா (74). இவா் கடந்த ஜூலை 23 ஆம் தேதி திருமயம் கோயில் திருவிழாவுக்குச் சென்றுவிட்டு மூன்று நாள்களுக்குப் பிறகு வீடு திரும்பியபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 31 பவுன் தங்க நகைகள், 20 வைரக் கற்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. அவற்றின் மொத்த மதிப்பு சுமாா் ரூ. 30 லட்சம்.

இதுகுறித்து மல்லிகா அளித்த புகாரின்பேரில் கே.கே. நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து, கைரேகைகள், அப்பகுதி சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து விசாரித்தனா்.

Advertisement

Advertisement

அப்போது சுப்பிரமணியபுரம் பகுதியைச் சோ்ந்த ஜூடு ஆப்ரஹாமை (23) போலீஸாா் சனிக்கிழமை பிடித்து விசாரித்த நிலையில், அவரும், மற்றொருவரும் சோ்ந்து திருட்டில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டாா். இதையடுத்து அவரிடமிருந்து 15 பவுன் தங்கச் சங்கிலிகளை பறிமுதல் செய்த போலீஸாா், மற்றொருவரைத் தேடுகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments