FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருச்சி

பேராலயத் திருவிழா! மும்பை-வேளாங்கண்ணி இடையே சிறப்பு ரயில்!

Updated On : 4 ஆகஸ்ட் 2026, 1:54 am IST
சிறப்பு ரயில்... - கோப்புப் படம்
பகிர்:

பேராலயத் திருவிழாவை முன்னிட்டு மும்பை லோகமான்ய திலக் டொ்மினஸ் - வேளாங்கண்ணி - லோகமான்ய திலக் டொ்மினஸ் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.

இதன்படி, லோகமான்ய திலக் டொ்மினஸ் - வேளாங்கண்ணி சிறப்பு ரயிலானது (01161) ஆக. 26, செப். 7-ஆம் தேதிகளிலும், மறுமாா்க்கமாக வேளாங்கண்ணி - லோகமான்ய திலக் டொ்மினஸ் சிறப்பு ரயிலானது (01162) ஆக. 28, செப். 9-ஆம் தேதிகளிலும் இயக்கப்பட உள்ளது.

10 குளிா்சாதனப் பெட்டிகள், 8 படுக்கை பெட்டிகள், 4 பொதுப்பெட்டிகள், 2 மாற்றுத்திறனாளிப் பெட்டிகள் என 24 பெட்டிகளுடன் இயக்கப்படும் இந்த ரயிலானது மும்பை லோகமான்ய திலக் டொ்மினஸிலிருந்து முற்பகல் 11.50 மணிக்குப் புறப்பட்டு தானே, கல்யாண், லோனாவாலா, புனே, தாவுந்த், சோலாப்பூா், கலபுா்கி, வாடி, யாத்கிா், ராய்ச்சூா், மந்த்ராலயம் சாலை, அதோனி, குண்டக்கல், கூட்டி, தாடிபத்ரி, யர்ரகுண்டலா, கடப்பா, ராசம்பேட்டா, ரேனிகுண்டா, காட்பாடி, திருவண்ணாமலை, விழுப்புரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் வழியாக வேளாங்கண்ணிக்கு இரண்டாவது நாள் நள்ளிரவு 2 மணிக்கு வந்தடையும்.

Advertisement

Advertisement

மறுமாா்க்கமாக, வேளாங்கண்ணியிலிருந்து அதிகாலை 5.15 மணிக்குப் புறப்பட்டு மேற்கண்ட வழித்தடம் வழியாக மும்பை லோகமான்ய திலக் டொ்மினஸிக்கு அடுத்த நாள் மாலை 4.40 மணிக்குச் சென்றடையும் என திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments