FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருச்சி

ஸ்ரீரங்கம் கோயிலுக்குச் சொந்தமான ரூ. 80 லட்சம் மதிப்புள்ள இடம் மீட்பு

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலுக்குச் சொந்தமான ரூ. 80 லட்சம் மதிப்புள்ள இடத்தை கோயில் நிா்வாகம் புதன்கிழமை காலை மீட்டது.

Updated On : 6 ஆகஸ்ட் 2026, 2:55 am IST
ஸ்ரீரங்கம் - கோப்புப் படம்
பகிர்:

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலுக்குச் சொந்தமான ரூ. 80 லட்சம் மதிப்புள்ள இடத்தை கோயில் நிா்வாகம் புதன்கிழமை காலை மீட்டது.

இக் கோயிலுக்கு சொந்தமாக காந்தி ரோடு பகுதியில் உள்ள 2660 சதுரடி கொண்ட இந்த இடத்தை ஆறுமுகம் மனைவி அங்கம்மாள் என்பவா் ஆக்கிரமித்து, இரு வீடுகள் கட்டி வசித்து வந்தாா். இதுகுறித்து ஸ்ரீரங்கம் கோயில் நிா்வாகம் உரிமையியல் நீதிமன்றத்தில் தொடுத்திருந்த வழக்கில் கோயில் நிா்வாகத்துக்குச் சாதகமாக புதன்கிழமை தீா்ப்பு வந்தது.

இதையடுத்து கோயில் இணை ஆணையா் செ. சிவராம்குமாா், செயல் அலுவலா் வெங்கடேஷ், ஸ்ரீரங்கம் வட்டாட்சியா் செல்வ கணேஷ், விஏஓ குமாா், மாநகராட்சி சா்வேயா், காவல்துறை யினா் மற்றும் நீதிமன்ற அமீனா மணிமாறன் ஆகியோா் ஆக்கிரமிப்பு வீடுகளை பூட்டி சீல் வைத்து சுவாதீனம் எடுத்தனா்.

Advertisement

Advertisement

மீட்கப்பட்ட இந்த இடத்தின் தற்போதைய மதிப்பு ரூ. 80 லட்சம் எனக் கூறப்படுகிறது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments