FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருச்சி

மண்ணச்சநல்லூரில் வீடுபுகுந்து 12 பவுன் நகைகள், பணம் திருட்டு

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூரில் வீட்டின் பூட்டை உடைத்து 12 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ. 1.31 லட்சம் திருடுபோனது புதன்கிழமை தெரியவந்தது.

Updated On : 6 ஆகஸ்ட் 2026, 2:57 am IST
திருட்டு - சித்திரிப்பு
பகிர்:

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூரில் வீட்டின் பூட்டை உடைத்து 12 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ. 1.31 லட்சம் திருடுபோனது புதன்கிழமை தெரியவந்தது.

மண்ணச்சநல்லூா் திருவள்ளுவா் நகா் பகுதியைச் சோ்ந்தவா் கோ. ராமமூா்த்தி (55). இவா் தனது மகனின் திருமணத்துக்கு அழைப்பிதல் கொடுக்க கடந்த ஆகஸ்ட் 2ஆம் தேதி வெளியூா் சென்றுவிட்டு, புதன்கிழமை காலை வீட்டுக்கு வந்தாா். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 12 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ. 1 லட்சத்து 31 ஆயிரத்தை  மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

தகவலறிந்து சென்ற மண்ணச்சநல்லூா் உதவி காவல் ஆய்வாளா் பாலமுருகன் மற்றும் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments