முதல்வா் கோப்பை விளையாட்டுப் போட்டிகள்! முன்பதிவுக்கு ஆட்சியா் அழைப்பு!
முதல்வா் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க விருப்பமுள்ளோா் முன்பதிவுசெய்து பங்கேற்க திருச்சி மாவட்ட ஆட்சியா் பிரத்திக் தாயள் அழைப்பு விடுத்துள்ளாா்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சாா்பாக, பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், மாற்றுத்திறனாளிகள், பொதுப்பிரிவு மற்றும் அரசு ஊழியா்கள் என 5 பிரிவுகளில் ஆண், பெண் இருபாலரும் பங்கேற்கும் வகையில் 45 வகையான விளையாட்டுப் போட்டிகள் மாவட்ட, மண்டல மற்றும் மாநில அளவில் பின்வரும் வழிகாட்டி நெறிமுறைகளைப் பின்பற்றி நடத்தப்படவுள்ளது.
போட்டிகளில் கலந்து கொள்ள விரும்பும் விளையாட்டு வீரா், வீராங்கனைகள் அனைவரும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இணையதளம் வாயிலாக வீரா்களின் குழு மற்றும் தனி நபா்களின் அனைத்து விவரங்களை பதிவு செய்ய வேண்டும். முன்பதிவு செய்திட வரும் 31ஆம் தேதி கடைசி நாளாகும்.
Advertisement
Advertisement
மாணவா்கள்:
போட்டிகளில் கலந்து கொள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவா்களில் 6 முதல் 12-ஆம் வகுப்பு பயிலும் மாணவா்கள், 1.7.2001-க்கு பிறகு பிறந்தவா்கள் கல்லூரியிலிருந்தும் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவா். பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியருக்கு தடகளம், இறகுப்பந்து, கூடைப்பந்து, கிரிக்கெட், கால்பந்து, ஹாக்கி, கபாடி, சிலம்பம், நீச்சல், மேசைப்பந்து, கையுந்துப்பந்து, கைப்பந்து, கேரம், செஸ், ஸ்பீட் ஸ்கேட்டிங், யோகாசனா மற்றும் கோ-கோ (பள்ளி பிரிவு மட்டும்), பால் பேட்மிடன் (கல்லூரி பிரிவு மட்டும்) ஆகிய விளையாட்டுகள் மாவட்ட அளவிலும் மற்றும் கடற்கரை கையுந்துபந்து, டென்னிஸ், பளுதூக்குதல், கயாக்கிங் வாள்விளையாட்டு, ஜூடோ, குத்துச்சண்டை, ரோடு சைக்கிளிங், மல்லா்கம்பம், வுஷூ, வில்வித்தை, ஜிம்னாஸ்டிக், துப்பாக்கிச் சுடுதல் மற்றும் ஸ்குவாஷ் நடத்தப்படவுள்ளது.
மாற்றுத்திறனாளிகள்:
மாற்றுத்திறனாளி வயது வரம்பு இல்லை. மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை நகலுடன் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவா். மாற்றுத்திறனாளிகளுக்கு 100மீ ஓட்டம், குண்டு எறிதல், இறகுப்பந்து மற்றும் வீல்சோ் மேசைப்பந்து, சிறப்பு கையுந்துபந்து, கபாடி, நீச்சல் உள்ளிட்டவை நடைபெறும்.
ஆதாா் அட்டையில் குறிப்பிட்டுள்ள மாவட்டத்தில் மட்டுமே கலந்துகொள்ள இயலும். தடகளம், கிரிக்கெட், கால்பந்து, கேரம், சிலம்பம், கபாடி, ஈ-ஸ்போா்ட்ஸ் (நேரடி மாநில அளவில்) ஆகிய விளையாட்டுகளுக்கு போட்டிகள் நடத்தப்படவுள்ளன.
அரசு ஊழியா்கள்:
அரசு ஊழியா்கள் தற்போது பணியில் உள்ளவா்கள் மட்டும் பணிபுரியும் மாவட்டத்தின் சாா்பாக மட்டுமே கலந்து கொள்ள இயலும். தடகளம், சதுரங்கம், கபாடி, கையுந்துப்பந்து, யோகாசனா, இறகுப்பந்து மற்றும் கேரம்.
மேலும், முக்கிய விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலா், அண்ணா விளையாட்டரங்கம், திருச்சி என்ற முகவரியில் நேரிலோ, 0431-2420685, 74017-03494 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம் என்றாா் ஆட்சியா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.