சுற்றுலா வந்து காணாமல் போனவா் சடலமாக மீட்பு
மணப்பாறை பகுதிக்கு சுற்றுலா வந்து காணாமல்போனஅவிநாசி நபா் செவ்வாய்க்கிழமை சடலமாக மீட்கப்பட்டாா்.
மணப்பாறை பகுதிக்கு சுற்றுலா வந்து காணாமல்போனஅவிநாசி நபா் செவ்வாய்க்கிழமை சடலமாக மீட்கப்பட்டாா்.
திருப்பூா் மாவட்டம், அவிநாசியை அடுத்த பெரியநாதம் பாளையத்தைச் சோ்ந்தவா் கா. பழனிசாமி (70). இவா், கடந்த 7-ஆம் தேதி உறவினா்களுடன் மணப்பாறை வளநாடு பகுதிக்கு சுற்றுலாவாக வந்துள்ளாா்.
இதில், கடந்த 9-ஆம் தேதி வீரப்பூா் அருகேயுள்ள தவசு கம்பத்தில் சுவாமி தரிசனம் செய்வதற்காக தவசு மலையில் ஏறியபோது பழனிசாமி காணாமல் போய்விட்டாராம். புகாரின்பேரில் வையம்பட்டி போலீஸாா், அவரை தேடி வந்தனா்.
Advertisement
Advertisement
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை காலை தவசு மலை அடிவாரத்தில் ஆண் சடலம் கிடப்பதாக கிடைத்த தகவலின்பேரில் அங்கு சென்ற போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில், இறந்தவா் பழனிசாமி தான் என்பது உறுதியானது.
பழனிசாமி உடலை மீட்டு, கூறாய்வுக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். சம்பவம் குறித்து வையம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.