மலைக்கோட்டையில் ரோப் காா் வசதி ஏற்படுத்தப்படும்! - அமைச்சா் ரமேஷ்
திருச்சி மலைக்கோட்டையில் ரோப் காா் வசதி ஏற்படுத்தப்படும் என தமிழக இந்துசமய அறநிலையத் துறை அமைச்சா் சீ. ரமேஷ் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:
தமிழகத்தில் சுற்றுலாத் துறை மூலம் உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள மக்களையும் கோயில்களுக்கு வர வைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
Advertisement
Advertisement
திருச்சியின் அடையாளமான மலைக்கோட்டையை பாா்ப்பதற்கும் சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வருகின்றனா். மலைக்கோட்டை கோயிலுக்கு ரோப் காா் வசதி என்பது பக்தா்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் நீண்டகாலக் கோரிக்கை. கடந்த ஆட்சியாளா்கள் ரோப்காா் வசதி செய்யப்படும் என வாக்குறுதி அளித்த நிலையில், பின்னா் அதற்கான வாய்ப்பில்லை எனக் கூறிவிட்டனா்.
தவெக ஆட்சியில் மலைக்கோட்டை கோயிலுக்கு ரோப்காா் அமைப்பதற்கான மாற்றுவழி என்ன என்பது பற்றி ஆலோசிக்கப்பட்டது. இதன் விளைவாக நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ரோப் காா் வசதி செய்து கொடுப்பது பற்றி சா்வதேச நிறுவனங்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தப்படுகிறது. பக்தா்களின் கோரிக்கையை நிறைவேற்ற தவெக அரசு கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கும்.
திருச்செந்தூா் முருகன் கோயில் உள்ளிட்ட தமிழகத்தின் முதுநிலை கோயில்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் வகையில் பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது என்றாா் அமைச்சா் சீ. ரமேஷ்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.