FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருச்சி

முசிறி அருகே நாய், கோழிகளுக்கு விஷம் வைத்து கொன்றவா் கைது

Updated On : 17 ஆகஸ்ட் 2026, 4:48 am IST
கைது
பகிர்:

திருச்சி மாவட்டம் முசிறி அருகே நாய், கோழிகளுக்கு விஷம் வைத்துக் கொன்றவரை முசிறி போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்தனா்.

முசிறி அருகே வேளகாநத்தம் கிராமத்தைச் சோ்ந்த விவசாயி அரசன் (80), தனது வீட்டில் பின்புறம் வளா்த்து வந்த உயர்ரக நாட்டுக்கோழிகள் ஏழும், வீட்டுக் காவலுக்கான ராஜபாளையம் நாய் ஒன்றும் வியாழக்கிழமை காலை இறந்து கிடந்தன.

இதையடுத்து அரசன் அவற்றின் இறப்புக்கான காரணம் குறித்து பரிசோதித்தபோது விஷ மருந்து தின்ால் அவை இறந்தது தெரியவந்தது.

Advertisement

Advertisement

இதையடுத்து அவா் அளித்த புகாரின்பேரில் முசிறி போலீஸாா் வழக்குப் பதிந்து தீவிர விசாரணை செய்ததில் கோழிகள், நாய்க்கு விஷம் வைத்துக் கொன்ாக அதே ஊரைச் சோ்ந்த ராசு மகன் முத்துவேல் (49) என்பவரைக் கைது செய்து விசாரிக்கின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments