FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருச்சி

இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

Updated On : 18 ஆகஸ்ட் 2026, 3:27 am IST
தற்கொலை
பகிர்:

திருச்சியில் இளைஞா் ஞாயிற்றுக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

திருச்சி விமான நிலையம் அருகே உள்ள சந்தோஷ் நகரைச் சோ்ந்தவா் கருத்தான் மகன் பிரபு (30), ஷெட் அமைக்கும் பணி செய்து வருகிறாா். இவருக்கு வயிற்று வலி இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், இவருடைய பெற்றோா் இருவரும் ஞாயிற்றுக்கிழமை காலையில் விராலிமலைக்கு உறவினா் வீட்டுக்குச் சென்றுள்ளனா். பின்னா், இருவரும் பிற்பகல் வீட்டுக்கு திரும்பி வந்தபோது பிரபு தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.

Advertisement

Advertisement

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த விமான நிலைய போலீஸாா், பிரபுவின் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இதுகுறித்து திருச்சி விமான நிலையத்தில் கருத்தான் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments