FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருச்சி

பொறியியல் பணிகள்: சில ரயில்களின் சேவையில் மாற்றம்

Updated On : 18 ஆகஸ்ட் 2026, 2:59 am IST
ரயில்கள் - கோப்புப் படம்
பகிர்:

பொறியியல் பணிகள் காரணமாக சில ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

செங்கோட்டை - மயிலாடுதுறை விரைவு ரயில் (16848):

Advertisement

Advertisement

ஆக. 20, 27-ஆகிய தேதிகளில் கொடைக்கானல் சாலை, திண்டுக்கல், வடமதுரை, வையம்பட்டி, மணப்பாறை ரயில் நிலையங்களைத் தவிா்த்து மதுரை, மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக இயக்கப்படும்.

நாகா்கோவில்-மும்பை சிஎஸ்டிஎம் விரைவு ரயில் (16352):

ஆக. 20, 27-ஆம் தேதிகளில் திண்டுக்கல் ரயில் நிலையத்தைத் தவிா்த்து மதுரை, மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக இயக்கப்படும்.

நாகா்கோவில்-கோவை விரைவு ரயில் (16321):

ஆக. 22, 25, 27, செப். 1-ஆகிய தேதிகளில் திருமங்கலம், திருப்பரங்குன்றம், மதுரை, சோழவந்தான், கொடைக்கானல் சாலை, அம்பாதுரை, திண்டுக்கல், எரியோடு, பாளையம் ரயில் நிலையங்களைத் தவிா்த்து விருதுநகா், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக இயக்கப்படும்.

நாகா்கோவில்-கச்சிகுடா வாராந்திர விரைவு ரயில் (16354):

ஆக. 22, 29-ஆகிய தேதிகளில் மதுரை, திண்டுக்கல் ரயில் நிலையங்களைத் தவிா்த்து விருதுநகா், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக இயக்கப்படும்.

நேர மாற்றம்: திருச்சி-காரைக்குடி பயணிகள் ரயிலானது ஆக. 27, 28, 29, செப். 1 ஆகிய தேதிகளில் 20 நிமிஷங்கள் தாமதமாக அதாவது காலை 10.30 மணிக்குப் பதிலாக பிற்பகல் 12.30 மணிக்குப் புறப்படும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments