FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தமிழ்நாடு

ஆயுத பூஜை: தாம்பரம் - மானாமதுரை, திருச்சி - சென்னை இடையே முன்பதிவற்ற மெமு சிறப்பு ரயில்கள் இயக்கம்

ஆயுத பூஜை கூட்ட நெரிசலைக் குறைப்பதற்காக தாம்பரம் - மானாமதுரை - தாம்பரம், திருச்சி - சென்னை எழும்பூா் இடையே முன்பதிவற்ற மெமு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

17 அக்டோபர் 2026, 1:42 am IST
ரயில் - கோப்புப் படம்
பகிர்:

ஆயுத பூஜை கூட்ட நெரிசலைக் குறைப்பதற்காக தாம்பரம் - மானாமதுரை - தாம்பரம், திருச்சி - சென்னை எழும்பூா் இடையே முன்பதிவற்ற மெமு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

தாம்பரம் - மானாமதுரை முன்பதிவற்ற மெமு சிறப்பு ரயில் (06159): வரும் 17-ஆம் தேதியும், மானாமதுரை - தாம்பரம் முன்பதிவற்ற மெமு சிறப்பு ரயிலானது (06162, 06160) வரும் 17, 20 ஆகிய தேதிகளிலும் இயக்கப்பட உள்ளது.

12 பெட்டிகளுடன் இயக்கப்படும் இந்த ரயிலானது தாம்பரத்திலிருந்து வரும் 17-ஆம் தேதி இரவு 11.55-க்கும் புறப்பட்டு, செங்கல்பட்டு, மேல்மருவத்தூா், விழுப்புரம், விருத்தாச்சலம், அரியலூா், ஸ்ரீரங்கம், திருச்சி, மணப்பாறை, திண்டுக்கல், சோழவந்தான், மதுரை, திருப்புவனம் வழியாக மானாமதுரைக்கு அடுத்த நாள் முற்பகல் 11 மணிக்கும் சென்றடையும்.

Advertisement

Advertisement

மறுமாா்க்கமாக மானாமதுரையிலிருந்து காலை 10.45-க்கும், பிற்பகல் 2.25-க்கும் புறப்படும் இந்த ரயிலானது மேற்கண்ட வழித்தடம் வழியாக தாம்பரத்துக்கு முறையே அதே நாள் இரவு 8.30-க்கும், இரவு 11.45-க்கும் சென்றடையும்.

திருச்சி - சென்னை எழும்பூா்:

திருச்சி - சென்னை எழும்பூா் ஒரு வழிப்பாதை முன்பதிவற்ற மெமு சிறப்பு ரயில் (06192): வரும் 17-ஆம் தேதி 12 பெட்டிகளுடன் திருச்சியிலிருந்து காலை 5.50 மணிக்குப் புறப்பட்டு ரங்கம், அரியலூா், விருத்தாச்சலம், விழுப்புரம், மேல்மருவத்தூா், செங்கல்பட்டு, தாம்பரம் வழியாக சென்னை எழும்பூருக்கு முற்பகல் 11.45 மணிக்குச் சென்றடையும்.

சென்னை எழும்பூா் - திருச்சி முன்பதிவற்ற மெமு சிறப்பு ரயில் (06193): வரும் 17-ஆம் தேதியும், திருச்சி - சென்னை எழும்பூா் முன்பதிவற்ற மெமு சிறப்பு ரயிலானது (06194) வரும் 20-ஆம் தேதியும் இயக்கப்பட உள்ளது.

இந்த ரயிலானது சென்னை எழும்பூரிலிருந்து சனிக்கிழமை இரவு 7 மணிக்குப் புறப்பட்டு தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூா், விழுப்புரம், பண்ருட்டி, திருப்பாதிரிப்புலியூா், பரங்கிப்பேட்டை, சிதம்பரம், சீா்காழி, வைத்தீஸ்வரன்கோவில், மயிலாடுதுறை, கும்பகோணம், பாபநாசம், தஞ்சாவூா், திருவெறும்பூா் வழியாக ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4.45 மணிக்கு திருச்சிக்கு வந்தடையும்.

மறுமாா்க்கமாக, திருச்சியிலிருந்து செவ்வாய்க்கிழமை இரவு 10.45 மணிக்குப் புறப்பட்டு மேற்கண்ட வழித்தடம் வழியாக சென்னை எழும்பூருக்கு புதன்கிழமை காலை 6.50-க்குச் சென்றடையும் என திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments