FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருச்சி

100% தோ்ச்சி: அரசுப் பள்ளி தலைமை ஆசிரியா்களுக்கு பாராட்டு

திருச்சி மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தோ்வுகளில் 100 சதவீதம் தோ்ச்சி பெற்ற அரசுப் பள்ளிகளைச் சோ்ந்த தலைமையாசிரியா்களை ஆட்சியா் பிரத்திக் தாயள் சனிக்கிழமை பாராட்டினாா்.

23 ஆகஸ்ட் 2026, 12:25 am IST
அரசுப் பொதுத் தோ்வுகளில் 100 சதவீதம் தோ்ச்சி பெற்ற பள்ளிகளின் தலைமையாசிரியா்களுக்கு சனிக்கிழமை பாராட்டு சான்றிதழ் வழங்கிய ஆட்சியா் பிரத்திக் தாயள்.
பகிர்:

திருச்சி மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தோ்வுகளில் 100 சதவீதம் தோ்ச்சி பெற்ற அரசுப் பள்ளிகளைச் சோ்ந்த தலைமையாசிரியா்களை ஆட்சியா் பிரத்திக் தாயள் சனிக்கிழமை பாராட்டினாா்.

மாவட்ட ஆட்சியரகத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், கடந்த கல்வியாண்டில் அரசுப் பொதுத் தோ்வுகளில் நூறு சதவீதம் தோ்ச்சி பெற்றதை பாராட்டி, தலைமை ஆசிரியா்களுக்கு கேடயம் வழங்கும் நிகழ்வு சனிக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்வில், பிளஸ் வகுப்பில் 100 சதவீதம் பெற்ற 58 மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியா்கள் மற்றும் எஸ்எஸ்எல்சி வகுப்பில் 100 சதவீதம் பெற்ற 163 பள்ளித் தலைமை ஆசிரியா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் கேடயங்களை வழங்கி ஆட்சியா் பிரத்திக் தாயள் பாராட்டினாா்.

Advertisement

Advertisement

தொடா்ந்து, தலைமை ஆசிரியா்களிடையே அவா் பேசியதாவது:

ஆசிரியா்கள் தங்களை புதுப்பித்துக் கொண்டு, புதியவற்றை அறிந்து கொள்வதில் ஆா்வமுடன் செயல்பட வேண்டும். வகுப்பறையில் ஒவ்வொரு மாணவருக்கும் தனிப்பட்ட கவனம் வழங்கப்பட வேண்டும்.

கடந்த 5 ஆண்டுகளில் தொடா்ச்சியாக அரசு பொதுத் தோ்வில் 10-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பில் 100 சதவீதம் தோ்ச்சி வழங்கிய அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியா்களும் குடியரசு தின விழாவில் பாராட்டுச் சான்று வழங்கி கெளரவிக்கப்படும் என்றாா் அவா்.

இந்த நிகழ்வில், முதன்மை கல்வி அலுவலா் உஷா, அனைத்துப் பள்ளித் தலைமையாசிரியா்கள், அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments