FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருச்சி

கோயில் கும்பாபிஷேகத்தில் நகை பறித்த பெண் கைது

24 ஆகஸ்ட் 2026, 4:29 am IST
கைதான பொன்மணி.
பகிர்:

திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அருகே கும்பாபிஷேக நிகழ்ச்சியில் மூதாட்டியின் 2 பவுன் தங்கச் செயினை பறித்த பெண்ணை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

மணப்பாறையை அடுத்த மாருங்காபுரி வட்டம், பொன்னம்பட்டி பேரூராட்சியில் வசிப்பவா் சுந்தர்ராஜ் மனைவி அமிா்தம் (65). இவா் துவரங்குறிச்சி - பில்லுப்பட்டி சாலையில் உள்ள அம்மன் கோயில் கும்பாபிஷேகத்துக்கு ஞாயிற்றுக்கிழமை சென்றிருந்தாா்.

அப்போது அருகிலிருந்த பெண் மூதாட்டி கழுத்திலிருந்த 2 தங்கச் செயினை பறித்தாா். அப்போது அருகிலிருந்தோா் அப்பெண்ணை பிடித்து துவரங்குறிச்சி போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.

Advertisement

Advertisement

விசாரணையில் செயின் பறிப்பில் ஈடுபட்டவா் ராமநாதபுரம் கீழக்கரையை சோ்ந்த அா்ஜூனன் மனைவி பொன்மணி (32) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் அவரைக் கைது செய்து விசாரிக்கின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments