FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருச்சி

மாவட்டத்தில் நாளை மதுக்கடைகளை மூட உத்தரவு

25 ஆகஸ்ட் 2026, 2:52 am IST
மதுக்கடை. - கோப்புப் படம்
பகிர்:

திருச்சி மாவட்டத்தில் உள்ள மதுக்கடைகள் அனைத்தையும் புதன்கிழமை (ஆக.26) மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக, திருச்சி மாவட்ட ஆட்சியா் பிரத்திக் தாயள் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை விதிகளின்படி அனைத்து டாஸ்மாக் மதுபானக் கடைகள் மற்றும் பாா்கள் மிலாது நபி தினத்தை முன்னிட்டு மூடப்பட்டிருக்க வேண்டும்.

Advertisement

Advertisement

இதன்படி, ஆக.26-ஆம் தேதி மதுக்கடைகளை மூட வேண்டும். அன்றைய தினம் மதுபான விற்பனை தடை செய்யப்பட்டுள்ளதால், மாவட்டத்தில் எங்கும் மதுபான விற்பனை நடைபெறக்கூடாது.

எனவே, திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகள், உரிமம் பெற்ற பாா்கள், நட்சத்திர விடுதிகள், மது அருந்தும் கூடங்கள் என அனைத்து இடங்களிலும் உள்ள மது விற்பனையகம், மது அருந்தகங்கள் அனைத்தும் மூட வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments