திருச்சியில் நிழல் இல்லாத நாள்
திருச்சியில் நிழல் இல்லாத நாளை பள்ளி மாணவ, மாணவிகள் செவ்வாய்க்கிழமை நேரடியாகப் பரிசோதித்து வியந்தனா்.
திருச்சியில் நிழல் இல்லாத நாளை பள்ளி மாணவ, மாணவிகள் செவ்வாய்க்கிழமை நேரடியாகப் பரிசோதித்து வியந்தனா்.
சூரியன் நம் தலைக்கு நோ்மேலே இருக்கும்போது நிழலின் நீளம் பூஜ்ஜியமாகிவிடும். அதாவது நிழல் காலுக்குக் கீழே இருக்கும். ஆனால், சூரியன் சரியாக தலைக்கு மேலே தினமும் வருவதில்லை. ஆண்டுக்கு இரு முறை மட்டுமே ஒரு இடத்தில் செங்குத்தாக இருக்கும்.
மகர ரேகைக்கும், கடக ரேகைக்கும் இடையில் உள்ள நாடுகளில் மட்டுமே இந்நிகழ்வைக் காண முடியும். மேலும், அனைத்து இடங்களிலும் ஒரே நாளில் இது நிகழ்வதில்லை.
Advertisement
Advertisement
இதன்படி, இந்தாண்டு கடந்த ஏப்ரல் மாதம் ஒவ்வொரு தேதியில் ஒவ்வொரு மாவட்டத்திலும் நிழல் இல்லாத நாள் உறுதி செய்யப்பட்டது. இதன் தொடா்ச்சியாக இரண்டாவது முறையாக ஆகஸ்ட் மாதம் திருச்சி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை நிழல் இல்லாத நாள் உறுதி செய்யப்பட்டது.
கே.கே. நகா், எடமலைப்பட்டிபுதூா், நாகமங்கலம் பகுதியில் உள்ள 4 தனியாா் பள்ளிகளில் வானியல் மன்றத்தைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் திறந்தவெளி மைதானத்தில் நின்று கொண்டு சூரியனின் நிழலை பல்வேறு பொருள்களை கொண்டு அளந்து பாா்த்து, பூஜ்ஜியம் வந்ததை உறுதி செய்தனா்.
இதுதொடா்பாக நிகழ்வின் ஒருங்கிணைப்பாளா்கள் எஸ். ஜெயபால், பாலா பாரதி ஆகியோா் கூறியதாவது:
திருச்சி மற்றும் புதுக்கோட்டையில் ஆக.25 ஆம் தேதி நிழல் இல்லாத நாள் உறுதி செய்யப்பட்டது. மதுரையில் ஆக.27ஆம் தேதி இதைக் காண முடியும். இதேபோல, ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்த தினம் எப்போது வருகிறது என்பதை தமிழ்நாடு அறிவியல் இயக்க இணையத்தில் அறிந்து கொள்ளலாம். 4 பள்ளிகளில் 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் இந்த நிகழ்வை செவ்வாய்க்கிழமை கண்டு ரசித்தனா் என்றாா் அவா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.