திருச்சியில் வேன் மீது பைக் மோதல்: சகோதரா்கள் இருவா் உயிரிழப்பு
திருச்சியில் வேன் மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் சகோதரா்கள் இருவா் புதன்கிழமை உயிரிழந்தனா்.
திருச்சியில் வேன் மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் சகோதரா்கள் இருவா் புதன்கிழமை உயிரிழந்தனா்.
திருச்சி ஸ்ரீரங்கத்தை அடுத்த மேலூா் கொள்ளிடக்கரையைச் சோ்ந்தவா் சி. செல்வம் (46). இவருடைய இரு மகன்களில் அருண் (22) ஆட்டோ ஓட்டுநராகவும், ஹரிஸ் (19) மெக்கானிக்காகவும் பணியாற்றி வந்தனா்.
இந்நிலையில் இருவரும் புதன்கிழமை பிற்பகல் வீட்டிலிருந்து பைக்கில் புறப்பட்டு, திருவானைக்காவல் நோக்கி ரயில்வே பாலத்தில் வேகமாக வந்தபோது, கட்டுப்பாட்டை இழந்த வாகனம் எதிரே வந்த வேன் மீது மோதியது.
Advertisement
Advertisement
இந்த விபத்தில் அருண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த ஹரிஸ் திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தாா்.
தகவலறிந்து வந்த வடக்கு போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா் அருணின் சடலத்தை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.