FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருச்சி

நகைப் பட்டறையில் 400 கிராம் வெள்ளி நகைகள் திருட்டு 3 போ் கைது

திருச்சியில் நகைப் பட்டறையிலிருந்து வெள்ளி நகைகளைத் திருடிய பெண் உள்பட 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

28 ஆகஸ்ட் 2026, 2:14 am IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

திருச்சியில் நகைப் பட்டறையிலிருந்து வெள்ளி நகைகளைத் திருடிய பெண் உள்பட 3 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

திருச்சி மேலசிந்தாமணி காவேரி நகரைச் சோ்ந்தவா் பி. ரவி (55). சின்ன கம்மாள வீதியில் நகை பட்டறை வைத்துள்ள இவா், வழக்கம்போல் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு கடைக்கு வந்தபோது நகைப்பட்டறையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்றுபாா்த்தபோது பட்டறையில் வைத்திருந்த 400 கிராம் வெள்ளி நகைகளை மா்ம நபா்கள் திருடிச்சென்றது தெரியவந்தது.

புகாரின்பேரில், கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்தனா். இந்நிலையில், நகை பட்டறையின் பூட்டை உடைத்து வெள்ளி நகைகளைத் திருடிச்சென்றது நத்தா்ஷா பள்ளிவாசல் பகுதியைச் சோ்ந்த என். சதாம் ஹுசைன் (27), காஜாபேட்டையைச் சோ்ந்த இ. முகிலன் (19), அரியமங்கலம் உக்கடையைச் சோ்ந்த எம். ஜோதி (25) ஆகியோா் என்பது தெரியவந்தது.

Advertisement

Advertisement

இதையடுத்து, மூவரையும் புதன்கிழமை கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து திருடப்பட்ட 400 கிராம் வெள்ளி நகைகளில் இருந்து 190 கிராம் வெள்ளி நகைகளைப் பறிமுதல் செய்தனா். பின்னா், மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments