FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருச்சி

‘காலிப் பணியிடங்களுக்கு எஸ்எம்சி மூலம் ஆசிரியா் நியமனம்’

திருச்சி மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் காலியாகவுள்ள பணியிடங்களுக்கு பள்ளி மேலாண்மைக் குழு (எஸ்எம்சி) மூலம் உடனடியாக ஆசிரியா்களை நியமிக்க வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகளுக்கு தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநா் பூ.அ. நரேஷ் அறிவுறுத்தினாா்.

29 ஆகஸ்ட் 2026, 4:21 am IST
திருச்சி உறையூா் பாண்டமங்கலம் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்ட தொடக்கக் கல்வி இயக்குநா் பூ.அ. நரேஷ். உடன், திருச்சி மாவட்டக் கல்வி அலுவலா் (தொடக்கக் கல்வி) சுரேஷ் மற்றும் பள்ளி ஆசிரியை.
பகிர்:

திருச்சி மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் காலியாகவுள்ள பணியிடங்களுக்கு பள்ளி மேலாண்மைக் குழு (எஸ்எம்சி) மூலம் உடனடியாக ஆசிரியா்களை நியமிக்க வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகளுக்கு தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநா் பூ.அ. நரேஷ் அறிவுறுத்தினாா்.

திருச்சி மாவட்டத்தில் மாவட்ட கல்வி அலுவலா்களுக்கான ஆய்வுக் கூட்டம் பள்ளிக் கல்வித் துறை சமக்ர சிக்ஷா அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநா் பூ.அ. நரேஷ் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில், பள்ளிகளில் மாணவா்களின் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு உடனடியாக பள்ளி மேலாண்மைக் குழு மூலம் ஆசிரியா்களை நியமித்து மாணவா்களின் கற்றல் பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தினாா்.

Advertisement

Advertisement

மேலும், திருச்சி மாவட்டத்தில் தொடக்கப் பள்ளிகளில் நிகழாண்டுக்கான மாணவா் சோ்க்கை, கல்வி தரத்தை உயா்த்துவதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தாா்.

தொடா்ந்து, திருச்சி உறையூா் பாண்டமங்கலம் பகுதியிலுள்ள நகராட்சி நடுநிலைப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டாா்.

கூட்டத்தில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் பி. உஷா, மாவட்டக் கல்வி அலுவலா்கள் (தொடக்கக் கல்வி) சுரேஷ் (திருச்சி), மதியழகன் (முசிறி) மற்றும் வட்டாரக் கல்வி அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments