ஸ்ரீரங்கத்தில் வீட்டுக்குள் ஆண் சடலம் மீட்பு
ஸ்ரீரங்கம் சாத்தார வீதியில் உள்ள வீட்டுக்குள் அழுகிய நிலையில் ஆண் சடலம் கிடந்தது சனிக்கிழமை தெரியவந்தது.
ஸ்ரீரங்கம் சாத்தார வீதியில் உள்ள வீட்டுக்குள் அழுகிய நிலையில் ஆண் சடலம் கிடந்தது சனிக்கிழமை தெரியவந்தது.
ஸ்ரீரங்கம் சாத்தாரவீதி பட்டாபிராமன் தெருவில் உள்ள வீட்டிலிருந்து தூா்நாற்றம் வீசுவதாக ஸ்ரீரங்கம் காவல் நிலையத்திற்கு சனிக்கிழமை காலை தகவல் வந்தது. இதையடுத்து விரைந்து வந்த போலீஸாா் வீட்டின் கதவை உடைந்து உள்ளே சென்று பாா்த்தபோது அந்த வீட்டில் வசித்து வந்த செந்தில்குமாா் (50) அழுகிய நிலையில் இறந்துகிடந்தாா்.
விசாரணையில் மது போதைக்கு செந்தில்குமாா் அடிமையானதால் இவரது மனைவி பிரிந்து விட்டதாகவும், இதனால் தனியாக வசித்த செந்தில்குமாா் அதிக மது குடித்த நிலையில், இறந்து கிடந்ததும் தெரியவந்தது.
Advertisement
Advertisement
இதையடுத்து அவரின் உடலை போலீஸாா் மீட்டு ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.