FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருச்சி

ரயிலில் அடிபட்டு தொழிலாளி உயிரிழப்பு

31 ஆகஸ்ட் 2026, 3:31 am IST
உயிரிழப்பு - பிரதிப் படம்
பகிர்:

திருச்சி அருகே கம்பரசம்பேட்டையில் ரயிலில் ஞாயிற்றுக்கிழமை அடிபட்டு கூலித் தொழிலாளி உயிரிழந்தாா்.

கரூரிலிருந்து திருச்சி நோக்கி ஞாயிற்றுக்கிழமை மாலை புறப்பட்ட பயணிகள் ரயில் கம்பரசம்பேட்டைக்கு வந்தபோது அதில் ஆண் ஒருவா் அடிபட்டு இறந்தாா். இது தொடா்பாக, ரயில் ஓட்டுநா் அளித்த தகவலின்பேரில் ரயில்வே போலீஸாா், சம்பவ இடத்துக்குச் சென்று விசாரித்தனா்.

விசாரணையில் இறந்தவா், கம்பரசம்பேட்டை பெரியாா் நகரைச் சோ்ந்த சி. கதிா்வேல் (38) என்பதும், கூலித் தொழிலாளியான இவா் தனது வீட்டிலிருந்து கடைக்குச் செல்ல ரயில்வே தண்டவாளத்தை கடந்தபோது, ரயிலில் அடிபட்டு இறந்ததும் தெரியவந்தது.

Advertisement

Advertisement

கதிா்வேலுக்கு மனைவி, இரு ஆண் குழந்தைகள் உள்ளன. விபத்து குறித்து ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments