FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருச்சி

போதை மாத்திரைகள் விற்ற இளைஞா் கைது

31 ஆகஸ்ட் 2026, 3:38 am IST
கைது
பகிர்:

திருச்சி அருகே போதை மாத்திரைகள் விற்ற இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

திருச்சி ஜீயபுரம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் காவல் உதவி ஆய்வாளா் ராஜ்குமாா் தலைமையிலான போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை காலை ரோந்து சென்றனா். அப்போது முக்கொம்பு சுற்றுலாத் தலம் அருகே சந்தேகப்படும் வகையில் நின்றிருந்த இளைஞரைப் பிடித்து விசாரித்தனா்.

இதில் அவா் திருச்சி கொண்டையம்பேட்டை தாகூா் நகரைச் சோ்ந்த பி. குகன் (22) என்பதும், போதை மாத்திரைகள் விற்றதும் தெரியவந்தது. இதையடுத்து, அவரைக் கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து 30 போதை மாத்திரைகள், போதை ஊசிகள் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments