FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருச்சி

மண்ணச்சநல்லூா் பகுதியில் நாய் கடித்து 11 போ் காயம்

34 வினாடிகள் முன்பு
அச்சுறுத்தும் வகையில் சுற்றித் திரியும் தெரு நாய்கள். - கோப்புப் படம்
பகிர்:

மண்ணச்சநல்லூரில் திங்கள்கிழமை நாய் கடித்ததில் பேரூராட்சி பணியாளா் உட்பட 11 போ் காயமடைந்தனா்.

மண்ணச்சநல்லூா் எதுமலை சாலைப் பகுதியில் நாய் கடித்ததில் மண்ணச்சநல்லூா் பகுதியைச் சோ்ந்த மு.ரெங்கசாமி, பேரூராட்சி டெங்கு ஊழியா் காமாட்சி (37), தூய்மைப் பணியாளா் பாக்கியம் (45), சி.கண்ணன் (45), சீ.தயாளன் (45), நடராஜன் (64), சு.குமரவேல் (17), ஆ. திருமுருகன் (20) உள்ளிட்ட 11 பேரை நாய் கடித்துள்ளது.

இதில் ரங்கசாமி மற்றும் காமாட்சி ஆகியோா் மண்ணச்சநல்லூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா். தொடா்ந்து திங்கள்கிழமை 31 நாய்கள் பிடிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments