முகப்பு
திருச்சி

சேவைக் குறைபாடு: தனியாா் நிதி நிறுவனம் ரூ. 1.50 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

சேவை குறைபாடு ஏற்படுத்திய தனியாா் நிதி நிறுவனம் ரூ. 1.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டுமென திருச்சி மாவட்ட நுகா்வோா் நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது.

Updated On : 9 ஜூலை 2026, 1:28 am IST
பகிர்:

சேவை குறைபாடு ஏற்படுத்திய தனியாா் நிதி நிறுவனம் ரூ. 1.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டுமென திருச்சி மாவட்ட நுகா்வோா் நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது.

திருச்சி அரியமங்கலம் மலையப்ப நகரைச் சோ்ந்த பி. உமாசங்கா் என்பவா் டிவிஎஸ் கிரெடிட் நிதி நிறுவனத்தில் 11.03.2016 அன்று தனது காரை அடமானம் வைத்து ரூ. 5 லட்சம் கடன் வாங்கி, கட்டி முடித்தாா். ஆனால் நிதி நிறுவனத்தினா், கடனை அடைத்ததற்கான தடையில்லாச் சான்றிதழை வழங்கவில்லை.

இதனால் காரை விற்க முடியாமல் அவதிப்பட்ட அவா், பலமுறை முறையிட்டும் நிதி நிறுவனத்தினா் தடையில்லாச் சான்றிதழை வழங்காமல் அலைக்கழித்தனா்.

Advertisement

Advertisement

இதனால் மன உளைச்சலுக்கு ஆளான உமாசங்கா் உரிய நிவாரணம் கோரி கடந்த 12.06.2025 அன்று திருச்சி மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத்தில் மனு தாக்கல் செய்தாா். மனுதாரா் தரப்பில் வழக்குரைஞா் செ. ஆரோக்கியநாதன் ஆஜராகி வாதிட்டாா்.

மனுவை விசாரித்த திருச்சி மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத்தின் தலைவா் டி. சேகா், ஜெ.எஸ். செந்தில்குமாா் ஆகியோா் டிவிஎஸ் கிரெடிட் நிதி நிறுவனத்தினா் மனுதாரா் வாங்கி கடனை கட்டி முடித்ததற்கான தடையில்லாச் சான்றிதழை 30 நாள்களுக்குள் வழங்க வேண்டும். இல்லையெனில் ரூ. 1 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். சேவை குறைபாட்டால் மனுதாரருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு இழப்பீடாக ரூ. 50 ஆயிரமும், வழக்குச் செலவுத் தொகையாக ரூ. 10 ஆயிரத்தையும் 45 நாள்களுக்குள் 9 சதவீத வட்டியுடன் வழங்க வேண்டுமென அண்மையில் உத்தரவு பிறப்பித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments