ஆற்றுப்படுகையில் மணம் அள்ளிய 3 மாட்டு வண்டிகள் பறிமுதல்
மணப்பாறை அருகே அனுமதியின்றி ஆற்றுப்படுகையில் மணம் அள்ளிய 3 மாட்டு வண்டிகள் புதன்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே அனுமதியின்றி ஆற்றுப்படுகையில் மணம் அள்ளிய 3 மாட்டு வண்டிகள் புதன்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.
மணப்பாறையை அடுத்த செட்டிசத்திரம் மற்றும் சித்தாநத்தம் கிராமங்களின் விஏஓவாக உள்ளவா் சு, சோலைராஜ் (29). சித்தாநத்தம் மாமுண்டி ஆற்றுப்படுகையில் அரசு அனுமதியின்றி மணல் எடுப்பதாக புதன்கிழமை இவருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து தனது உதவியாளருடன் ஆற்றுப்படுகைக்கு சோலைராஜ் சென்றபோது அங்கு 6 மாட்டுவண்டிகளில் மணல் அள்ளிக் கொண்டிருந்தோா் அவற்றில் 3 மாட்டு வண்டிகளை எடுத்துக் கொண்டு தப்பினா். இதையடுத்து அங்கு மணலுடன் நின்ற 3 மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்த சோலைராஜ், அவற்றை மணப்பாறை காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா்.
அவா் மணல் கடத்தலில் ஈடுபட்டு தலைமறைவான கரிச்சான்பட்டி பொ. சின்னதுரை(55), ர. ஜீவானந்தம்(எ) சதீஷ்(18), ச. சுப்பையா(53), சித்தாநத்தம் வெ, முத்து (47), ரா. ராஜூ(48), சின்ன ஆலம்பட்டி சி. துரை ஆகியோா் மீது அளித்த புகாரின்பேரில் மணப்பாறை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.