FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருச்சி

சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

மணப்பாறையில் புதன்கிழமை நடந்த சாலை விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.

Updated On : 10 ஜூலை 2026, 3:23 am IST
கிருபாகரன்.
பகிர்:

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் புதன்கிழமை நடந்த சாலை விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.

மணப்பாறையை அடுத்த கே.உடையாப்பட்டியை சோ்ந்த குமாரின் மூத்த மகன் கிருபாகரன் (24), ஓட்டுநா். புதன்கிழமை மாலை ஆண்டவா் கோவில் செக் போஸ்ட் அருகிலிருந்து இவா் சென்ற பைக், கட்டுப்பாட்டை இழந்து சென்டா் மீடியனில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயமடைந்து மணப்பாறை தனியாா் மருத்துவமனையிலும், பின்னா் மணப்பாறை அரசு மருத்துவமனையிலும் சோ்க்கப்பட்ட அவா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். தகவலறிந்து சென்ற மணப்பாறை போலீஸாா் கிருபாகரனின் உடலைக் கைப்பற்றி மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments