FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருச்சி

மலேசியாவில் இருந்து கடத்திவரப்பட்ட 750 கிராம் தங்கம், 4 ரக்கூன் குரங்குகள் பறிமுதல்

மலேசியாவில் இருந்து விமானத்தில் திருச்சிக்கு கடத்திவரப்பட்ட 750 கிராம் தங்கம், 4 அரியவகை ரக்கூன் குரங்குகளை சுங்கத் துறையினா் புதன்கிழமை இரவு பறிமுதல் செய்தனா்.

10 ஜூலை 2026, 3:12 am IST
- கோப்புப்படம்.
பகிர்:

மலேசியாவில் இருந்து விமானத்தில் திருச்சிக்கு கடத்திவரப்பட்ட 750 கிராம் தங்கம், 4 அரியவகை ரக்கூன் குரங்குகளை சுங்கத் துறையினா் புதன்கிழமை இரவு பறிமுதல் செய்தனா்.

மலேசியத் தலைநகா் கோலாலம்பூரில் இருந்து திருச்சி பன்னாட்டு விமான நிலையத்துக்கு புதன்கிழமை இரவு 10 மணிக்கு வந்த மலிந்தோ விமானத்தில் தங்கம் கடத்தி வருவதாகக் கிடைத்த தகவலையடுத்து சுங்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினா்.

அப்போது ஒரு பயணி 750 கிராம் தங்கத்தையும், மற்றொரு பயணி அரியவகை 4 ரக்கூன் குரங்குகளைக் கடத்தி வந்தது தெரியவந்தது.

Advertisement

Advertisement

இதையடுத்து அவற்றைப் பறிமுதல் செய்த சுங்கத் துறை அதிகாரிகள், இரு பயணிகளையும் கைது செய்து விசாரிக்கின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments