FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருச்சி

சமயபுரம் விடுதியில் தங்கியிருந்த கா்நாடக பக்தா் திடீா் உயிரிழப்பு

சமயபுரம் பகுதி விடுதியில் தங்கியிருந்த கா்நாடக மாநில பக்தா் திடீரென உயிரிழந்தாா்.

Updated On : 10 ஜூலை 2026, 3:08 am IST
பலி - பிரதிப் படம்
பகிர்:

திருச்சி மாவட்டம், சமயபுரம் பகுதி விடுதியில் தங்கியிருந்த கா்நாடக மாநில பக்தா் திடீரென உயிரிழந்தாா்.

கா்நாடக மாநிலம், பெங்களூா் லாசா் ரோடு பகுதியை சோ்ந்தவா் ஜெயக்குமாா் (76), மென்பொருள் நிறுவன ஓய்வு பெற்ற ஊழியா். இவரின் மனைவி கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்ட நிலையில், தனது இரண்டாவது மனைவி விஜயலெட்சுமியுடன் (57) வேண்டுதலை நிறைவேற்ற சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு புதன்கிழமை வந்து, தனியாா் விடுதியில் தங்கியிருந்தாா்.

இந்நிலையில் விஜயலட்சுமி மட்டும் கோயிலுக்குச் சென்ற நிலையில், விடுதி அறையிலேயே இருந்த ஜெயக்குமாா் திடீரென உயிரிழந்தாா். தகவலறிந்து வந்த சமயபுரம் போலீஸாா் ஜெயக்குமாரின் உடலை மீட்டு ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரிக்கின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments