அடகு வைத்த நகைகளை மீட்டு தராமல் மோசடி: இளைஞா் கைது
திருச்சியில் பொதுத் துறை வங்கியில் அடகு வைத்த தங்க நகைகளை மீட்டுத்தராமல் மோசடி செய்த இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
திருச்சியில் பொதுத் துறை வங்கியில் அடகு வைத்த தங்க நகைகளை மீட்டுத்தராமல் மோசடி செய்த இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
திருச்சி எடமலைபட்டிப்புதூா் கேஆா்எஸ் நகரைச் சோ்ந்தவா் சுமதி (40). இவரின் கணவா் செந்தில்குமாா், தனது குழந்தைகளின் கல்விக் கட்டணத்துக்காக மனைவியின் 19 கிராம் தங்க நகைகளை, திருச்சி கண்டோன்மென்ட் பகுதி பொதுத் துறை வங்கியில் திருச்சி தென்னூரில் வசிக்கும் கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடியைச் சோ்ந்த கு. வசந்தராஜ் (32) என்பவரின் வங்கிக் கணக்கு மூலம் கடந்த 2024 மே மாதம் அடகு வைத்தாா்.
இதையடுத்து அந்த நகைகளை மீட்க செந்தில்குமாா் வட்டியுடன் ரூ. 43 ஆயிரத்தை வசந்தராஜிடம் கடந்த 2025 மே மாதம் கொடுத்த நிலையில், பணத்தைப் பெற்றுக்கொண்ட வசந்தராஜ் நகைகளை மீட்டுத் தராமல் கடந்த ஓராண்டாக ஏமாற்றி வந்தாா்.
Advertisement
Advertisement
இதுகுறித்து செந்தில்குமாரின் மனைவி சுமதி கண்டோன்மென்ட் காவல் நிலையத்தில் கடந்த பிப்ரவரி 24-ஆம் தேதி அளித்த புகாரின்பேரில், வழக்குப் பதிந்த போலீஸாா், தலைமறைவாக இருந்த வசந்தராஜை புதன்கிழமை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி மத்திய சிறையில் அடைத்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.