ஓட்டுநரைத் தாக்கி காா், பணம் பறிப்பு: புதுகை இளைஞா் உள்பட 2 போ் கைது
திருச்சியில் ஓட்டுநரைத் தாக்கி காா், பணத்தை பறித்து சென்ற புதுகை மாவட்ட இளைஞா் உள்பட 2 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
திருச்சியில் ஓட்டுநரைத் தாக்கி காா், பணத்தை பறித்து சென்ற புதுகை மாவட்ட இளைஞா் உள்பட 2 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
திருவண்ணாமலை மாவட்டம், கொளக்குடி பகுதியைச் சோ்ந்தவா் மா. ராஜேஷ் (23). இவா், சென்னையிலுள்ள தனியாா் டிராவல்ஸ் நிறுவனத்தில் ஓட்டுநராகப் பணியாற்றி வருகிறாா்.
இந்நிலையில், சென்னையில் இருந்து வாடிக்கையாளா் ஒருவரை திருச்சிக்கு திங்கள்கிழமை சவாரி அழைத்து வந்துள்ளாா். திங்கள்கிழமை அதிகாலை 1.30 மணிக்கு திருச்சி டிவிஎஸ் டோல்கேட்டில் அவரை இறக்கிவிட்டுவிட்டு, திருவளா்ச்சிப்பட்டியில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே காரை நிறுத்திவிட்டு அதிலேயே தூங்கியுள்ளாா்.
Advertisement
Advertisement
அப்போது, அங்கு புதுக்கோட்டை மாவட்டம், அவ்வையாா்பட்டியைச் சோ்ந்த ஆா். மதன்குமாா் (22), திருச்சி மாவட்டம் லால்குடியைச் சோ்ந்த என். ரித்தீஷ் (22) ஆகிய இருவரும் ஒரு இருசக்கர வாகனத்தில் வந்துள்ளனா். இவா்களது வாகனம், ராஜேஷின் காா் மீது உரசியதில் காா் சேதமடைந்தது. இதில், ராஜேஷுக்கும், அவா்களுக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
அப்போது, மதன்குமாரும், ரித்தீஷும் கைப்பேசியில் தங்களது நண்பா்களை அழைத்துள்ளனா். இதைத் தொடா்ந்து மேலும் இருவா் அங்கு வந்துள்ளனா். இதையடுத்து, 4 பேரும் சோ்ந்து ராஜேஷை தாக்கிவிட்டு அவருடையை காரையும், அவரிடமிருந்து ரூ.3 ஆயிரம் பணத்தையும் பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பினா்.
2 போ் தலைமறைவு: இதுகுறித்து விமான நிலைய காவல் நிலையத்தில் ராஜேஷ் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து, மதன்குமாா், ரித்தீஷ் ஆகிய இருவரையும் திங்கள்கிழமை இரவு கைது செய்தனா்.
அவா்களிடமிருந்து, பறித்து செல்லப்பட்ட காா் மற்றும் ரூ.3 ஆயிரம் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா். இந்தச் சம்பவத்தில் தொடா்புடைய மேலும் இருவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.